ADDED : ஜூலை 17, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
எரியோடு, ஜூலை 18-
எரியோட்டில் பொது சுகாதாரத்துறை பேரூராட்சி இணைந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
பேரூராட்சி அலுவலகத்தில் துவங்கி கடைவீதியில் முடிந்தது. பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் பொன் மகேஸ்வரி தலைமை வகித்தனர். டாக்டர் ரூபன் சக்கரவர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் ஆலிவர் கீட்ஸ் கிறிஸ்டின் ராஜ், செயல் அலுவலர் சையது அபுதாகிர், சுகாதார ஆய்வர்கள் சண்முகவேல், மதிச்செல்வன், குணச்சந்திரன் பங்கேற்றனர்.
