ADDED : ஆக 08, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஆக.9-
ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். போதை தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கார்த்திக், போலீசார் பலர் பங்கேற்றனர்.
