UPDATED : ஆக 08, 2026 06:57 PM
ADDED : ஆக 08, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட மாவட்டம். பூ, காய்கறி, பழங்கள், மானாவாரி பயிர் விவசாயத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், விவசாயிகள் உள்ளனர்.
மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பருவமழை அளவு குறைந்தது. இந்த ஆண்டு தற்போது வரை மழை பெய்யாதது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. திண்டுக்கல் உள்பட மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுபாட்டால் மக்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், தமிழகத்தில் போதிய பருவமழை பெய்ய வேண்டியும் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.
