/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யாபட்டி முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை
/
அய்யாபட்டி முனீஸ்வரர் கோயில் மண்டல பூஜை
ADDED : ஆக 04, 2024 06:28 AM

கோபால்பட்டி : -கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கே.அய்யாபட்டி ஜடா முனீஸ்வரர் கோயிலில் ஜூன் 16ல் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் ஜடா முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மண்டல பூஜை தொடர்ந்து அதிகாலை கோயில் முன் உள்ள யாக சாலையில் கோ பூஜை, விநாயகர் ஹோமம், கங்க பூஜை, , சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றசிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அப்போது மூன்றிற்கும் மேற்பட்ட கருடன்கள் வானத்தில் வட்டமிட பக்தர்கள் பரவசம் அடைந்தார்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகை சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் கலந்து கொண்டனர்.