ADDED : ஜூலை 13, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், ஜூலை 14-
ஒட்டன்சத்திரத்தில் இந்திய மருத்துவக் கழக கிளை சார்பில் இரட்டையர் இறகுப்பந்து போட்டிகள் நடந்தது. கிளைத்தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற கூட்டுறவு வங்கி முன்னாள் செயலர் கணேஷ்குமார், ஆசிரியர் சவுந்தரராஜன், ஆலோசகர் கனகராஜ், ஆசிரியர் பொன்ராஜ், முன்னாள் கூட்டுறவு துணைப்பதிவாளர் டேனியல் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறகுப்பந்து கிளப் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், குழுவினர் போட்டிகளை நடத்தினர்.
