/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வளர்ச்சிப் பணிக்காக ஆலமரத்தை அகற்றக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
வளர்ச்சிப் பணிக்காக ஆலமரத்தை அகற்றக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
வளர்ச்சிப் பணிக்காக ஆலமரத்தை அகற்றக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
வளர்ச்சிப் பணிக்காக ஆலமரத்தை அகற்றக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 04, 2024 03:35 AM
அகரம் : திண்டுக்கல் மாவட்டம் அகரம் ஆதிதிராவிடர் காலனி விளையாட்டு மைதானத்திலுள்ள ஆலமரத்தை வளர்ச்சிப் பணிக்காக அகற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அகரம் சாந்தகுமார் தாக்கல் செய்த பொது நல மனு: அகரம் பேரூராட்சிக்குட்பட்ட கோட்டூர் ஆவரம்பட்டியில் வசிக்கிறோம். எங்களுக்கு தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை வீட்டுமனைகளை வழங்கியது.
அக்காலனியில் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கிய இடத்தில் ஆலமரம் உள்ளது. அம்மரத்தை அகற்றி திருமண மண்டபம் அமைக்க அரசு தரப்பில் முயற்சிக்கப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை.
அருகில் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, அங்கு மண்டபம் அமைக்கலாம்.
தேசிய மரமான ஆலமரத்தை அகற்ற தடை விதிக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி, உபகரணங்கள் வழங்க வேண்டும் என கலெக்டர், அகரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு:
ஆலமரத்தை அகற்றவில்லை. திருமண மண்டபம் அமைக்க அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள்: எதிர்காலத்தில் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணியின்போது ஆலமரத்தை அகற்றக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

