/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடையில் தடுப்புச்சுவர் அமைப்பு
/
சாக்கடையில் தடுப்புச்சுவர் அமைப்பு
ADDED : ஆக 15, 2024 05:22 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் அரசு மருத்துவமனை பின்புறம் கோபாலசமுத்திரக்கரை ரோட்டில் உள்ள சாக்கடையில் தினமலர் செய்தி எதிரொலியாக தடுப்புச்சுவர் அமைக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை பின்புறம் கோபாலசமுத்திரக்கரை ரோட்டில் உள்ள சாக்கடையில் பல ஆண்டுகளாக தடுப்புச்சுவர் இல்லை. இதனால் மழை நேரங்களில் கழிவுநீர் அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்து மக்களை பாடாய்படுத்தியது. திறந்தவெளியில் இருப்பதால் டூவீலரில் வருவோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். இது தொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.
இதன் எதிரொலியாக தடுப்புச்சுவர் கட்டும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.