ADDED : ஜூலை 24, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, ஜூலை 25-
கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளியில் சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வத்தலக்குண்டு பகுதிகளில் இருந்து 23 அணிகள் பங்கேற்றன. 12, 14, 17, 19 வயதோருக்கான கூடைப்பந்து போட்டி பகல், இரவு ஆட்டங்களாக நடந்தது.
திண்டுக்கல் செயிண்ட் ஜோசப் பள்ளி அணி இரண்டு பிரிவுகளிலும், திண்டுக்கல் எஸ்.பி.சி., பள்ளி, பழநி அக் ஷயா பள்ளி அணிகள் தலா ஒரு பிரிவிலும் வெற்றி பெற்றன.
முதல் 2 இடங்களை பிடித்த அணி வீராங்கனைகளுக்கு சி.பி.எஸ்.சி., பள்ளிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கயல்விழி பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். ஏற்பாடுகளை மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் செய்திருந்தார்.
