ADDED : ஜூலை 24, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி, ஜூலை 25-
ஆத்துார் ஒன்றியம் என்.பஞ்சம்பட்டி ஊராட்சி 5வது வார்டு குழந்தை ஏசு தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மார்ச் 14ல் துவங்கியது. கழிவுநீர் வெளியேற்றுவதில் அடுத்தடுத்த தெருக்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பணியில் தாமதம் நீடிக்கிறது. இதையடுத்து அந்த தெருவில் அசுத்த நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பஞ்சம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். சற்று நேரத்தில் தாங்களாகவே கலைந்தனர்.
