ADDED : ஜூலை 24, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி, ஜூலை 25-
சின்னாளபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ பிரிவு புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தீஸ்வரி தலைமை வகித்தார். சித்த மருத்துவர் சுஜாதா, டாக்டர் பின்சி, அலுவலக கண்காணிப்பாளர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தனர். மருந்தாளுனர் செந்தில்வேல் வரவேற்றார். குத்து விளக்கேற்றி இனிப்பு வழங்கி புதிய கட்டடம் திறக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல், சமுதாய சுகாதார செவிலியர் நீலவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
