/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டியில் பெரிய கும்பிடு விழா
/
சின்னாளபட்டியில் பெரிய கும்பிடு விழா
ADDED : ஜூன் 29, 2024 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : சின்னாளபட்டி கீழக்கோட்டை மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் பெரிய கும்பிடு விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
முகூர்த்தக்கால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதல், பால்குடம் ஊர்வலத்துடன் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
பிருந்தாவன தோப்பில் இருந்து குதிரை அழைப்பு, கரக்வலம் நடந்தது. பக்தர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது ஏராளமானோர் பொங்கல், மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமி அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்க தெப்பம், விசேஷ அலங்காரத்துடன் உற்ஸவர் ஊர்வலம் நடந்தது.