/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காங்., நிர்வாகிகள் மீது பா.ஜ.,புகார்
/
காங்., நிர்வாகிகள் மீது பா.ஜ.,புகார்
ADDED : ஜூலை 11, 2024 06:12 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் கட்சியினர் எஸ்.பி.,பிரதீப்பிடம் கொடுத்த மனுவில், திண்டுக்கல் மாநகர காங்., நிர்வாகிகள் பிரதமர் மோடி பெயரை களங்கப்படுத்தும் விதமாக பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டுவதும், சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புவது,ஆர்ப்பாட்டம்,தர்ணா போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலையை இழிவாக பேசுவதும் அவர் உருவ பொம்மையையும் எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
பா.ஜ.,நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டால் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சென்று காங்.,கட்சியினர் மிரட்டுகின்றனர். திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் உள்ளிட்ட 15 பேர் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.