/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுங்க தேர்தல் அலுவலருக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் புகார்

ADDED : ஏப் 21, 2024 04:38 AM
திண்டுக்கல்: ''ஓட்டுப்பதிவின் போது பொதுமக்களுக்கு வணக்கம் கூறியதற்கு வெளியேறுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீஸ் டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி,'' பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு புகார் அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது : பா.ஜ., மாவட்ட தலைவராகவும், மாநகராட்சி 14 வது வார்டு கவுன்சிலாரகவும் உள்ளேன். ஒய்.எம்.ஆர்., பட்டியில் ஓட்டு செலுத்த வந்தபோது கவுன்சிலர் என்ற முறையில் பொதுமக்கள் வணக்கம் செலுத்தினர். பதில் வணக்கம் செலுத்தியபோது, பணியில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜன் ஏன் வணக்கம் வைத்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆளுங்கட்சியின் துணையோடு எங்களது கட்சியினரை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தரக்குறைவாக பேசி நடந்து கொண்டது வேதனையாக இருக்கிறது.
துாண்ட வேண்டுமென்ற நோக்கோடு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருமையில் பேசி கட்சித் தொண்டர்களையும் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. டி.எஸ்.பி., நாகராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, சம்பவத்தை கருத்தில் கொண்டு உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.