/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் பா.ஜ., பொதுக்கூட்டம்
/
திண்டுக்கல்லில் பா.ஜ., பொதுக்கூட்டம்
ADDED : ஜூலை 31, 2024 06:19 AM
திண்டுக்கல், : தமிழக பா.ஜ., சிறப்பு செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய 7 தீர்மானங்களை விளக்கியும், முடிந்த லோக் சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் திண்டுக்கல் சட்டசபை தொகுதி பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நாகல்நகர் மேம்பாலம் அருகே நடந்த இதற்கு பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். செயலர் முத்துக்குமார் வரவேற்றார்.
பொருளாளர் மணிகண்டன், மாநகர தலைவர்கள் ரமேஷ், பால்ராஜ், சதீஸ்குமார், ஒன்றிய தலைவர்கள் காளியப்பன், வரதராஜன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் துரைசாமி பங்கேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரவிபாலா, பழனிவேல்சாமி, போஸ், மாவட்ட துணைத்தலைவர்கள் மல்லிகா, சந்திரசேகரன், பாலமுருகன், மாவட்ட செயலர் ஆனந்தி, அலுவலக செயலர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். தெற்கு மாநகர தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.