/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
ADDED : ஆக 26, 2024 07:09 AM
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் கிழக்கு மண்டல் பா.ஜ., சார்பில் பெரிய குளிப்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் -2024 பயிலரங்கம் நடந்தது. ஒன்றிய தலைவர் ருத்திரமூர்த்தி தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச்செயலாளர் ராமசாமி பேசினார். ஒன்றிய பொதுச் செயலாளர் கருப்புசாமி, ஊரக உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், சதீஷ்குமார், சின்னான், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, விவசாய அணி மாவட்ட தலைவர் நாட்டுத்துரை, கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் பெரியசாமி கலந்து கொண்டனர்.