/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் பா.ஜ.,வினர் ஊர்வலம்
/
திண்டுக்கல்லில் பா.ஜ.,வினர் ஊர்வலம்
ADDED : ஆக 16, 2024 05:16 AM

திண்டுக்கல்: சுதந்திரதினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் டூவீலர் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம் மெங்கிஸ் ரோடு, நாகல் நகர் ,கணேஷ் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு பகுதியில் முடிந்தது. மாநகராட்சி காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமை வகித்தார்.
இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிகரன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் நாட்ராயன், சூரியகுமார், துணைத் தலைவர்கள் தான்ராஜ், அருண்குமார், பிரேம், செயலாளர்கள் பாலாஜி, சிவக்குமார், கண்ணன், பொருளாளர் செல்வகுமார்,மாவட்ட துணைத் தலைவர்கள் மல்லிகா, செந்தாமரை, மாவட்டச் செயலாளர்கள் முத்துக்குமார், சபாபதி, ஆனந்தி பங்கேற்றனர்.
வடமதுரை:வேடசந்துார் சட்டசபை தொகுதிக்கான பா.ஜ.,வினரின் டூவீலர் ஊர்வலம் வடமதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். மண்டல தலைவர்கள் வீரப்பன், நாகராஜன், செந்தில்குமார், கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் டூவீலர்களில் அமர்ந்தபடி தேசிய கொடியை ஏந்தி ஊர்வலமாக நகரை வலம் வந்தனர்.பழநி பா.ஜ.,தலைமை அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தங்கராஜ் கொடியேற்றினார். அதன் பின் திண்டுக்கல் ரோடு வழியாக டூவீலரில் ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்ட் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி, காந்தி மார்க்கெட் ரோடு சென்று நேதாஜி சிலை அருகே ஊர்வலம் நிறைவு பெற்றது.
ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ராமசாமி மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி,மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை ஒன்றிய தலைவர்கள் ரகுபதி ருத்திர நாச்சிமுத்து, நகரத் தலைவர் சிவா, நகர பொதுச் செயலாளர் குமார்தாஸ் பங்கேற்றனர். மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் சூர்யா, நகரத் தலைவர் மணிமாறன் ஒருங்கிணைத்தினர். விருப்பாச்சி கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு பா.ஜ., ஓ.பி.சி. அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் மாணிக்கம் ஒருங்கிணைத்தார்.