ADDED : ஜூன் 08, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூன் 9 -
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாக நுழைவுவாயில் அருகே அகில இந்திய மஸ்லிஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்கவரி உயர்வை கண்டித்தும், சோலைஹால் நெட்டுத் தெருவில் வயதான முதியவர் ராஜாவை கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கருப்புத் துணியால் வாயை மூடிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஜ்அகமது தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தங்கப்பாண்டியன், துணைத் தலைவர் பாலாஜி, மாநகரத் தலைவர் சின்னத்தம்பி, புரட்சிகர சோசியலிஸ்ட் நிர்வாகி மரியதிவாகர் பங்கேற்றனர்.
