UPDATED : ஜூன் 08, 2026 06:25 PM
ADDED : ஜூன் 08, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் ஜி.டி.என்.கலைக்கல்லுாரி அருகே பலசரக்கு கடை நடத்தி வருபவர் வெள்ளைச்சாமி . நேற்றுமுன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள் புகுந்த நபர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடினார். இதன் பின் கடையில் மளிகை பொருட்களை திருடி சென்றனர். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். சி.சி.டி.வி. பதிவுப்படி கொள்ளையர்களை தேடுகின்றனர்.
