/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை பகுதியில் தொடரும் வெடிச்சத்தம்
/
வடமதுரை பகுதியில் தொடரும் வெடிச்சத்தம்
ADDED : ஆக 24, 2024 04:25 AM
வடமதுரை: வடமதுரை பகுதியில் நேற்று மதியம் 12:48 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
மாவட்டத்தில் வடமதுரை, தாமரைப்பாடி, எரியோடு, வேடசந்துார், சாணார்பட்டி பகுதியில் சில வார இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது வாடிக்கையாக உள்ளது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்திற்கு இச்சத்தம் கேட்கிறது. சில ஆண்டுகளாகவே இதுபோன்ற பலத்த வெடிச்சத்தம் அடிக்கடி கேட்கிறது. வழக்கமாக கல் குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கும் நேரத்தையொட்டியே இந்த வெடிச்சத்தம் கேட்கிறது.
இதனால் பலமற்ற, பழமையாக கட்டடடங்களில் விரிசல்கள் என பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரித்து கல்குவாரி வெடிகளால் தான் இந்த பலத்த சத்தம் ஏற்படுகிறது என்றால் வெடிப் பொருட்களின் அளவு முறைகளில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும்.