/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
/
நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
ADDED : ஆக 25, 2024 08:50 AM

திண்டுக்கல்: நத்தம் அருகே ஆவிச்சிபட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல், இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை வேளையில் பட்டாசுகள் குவித்து வைத்திருந்த இடத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும்,
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்
இந்த விபத்தில், பட்டாசு ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.