/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி மார்க்கெட் ரோட்டில் நெரிசலை குறைக்க தடுப்பு
/
பழநி மார்க்கெட் ரோட்டில் நெரிசலை குறைக்க தடுப்பு
ADDED : ஜூலை 06, 2024 06:08 AM

பழநி : பழநி காந்தி மார்க்கெட் ரோட்டில் நெரிசலை குறைக்கும் வகையில் கனரக வாகனங்களை செல்வதை தவிர்க்கும் வகையில் போலீசாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு.
பழநி காந்தி மார்க்கெட் ரோட்டில் கனரக வாகனங்கள் வருகையால் நெரிசல் ஏற்படுகிறது.
கனரக வாகனங்கள் செல்லும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்க்க தடுப்பு அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் கூறுகையில் ''வேல்ரவுண்டான பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பழைய தாராபுரம் ரோடு, சுப்பிரமணியபுரம் ரோடு, ராஜாஜி ரோடு சந்திப்பில் தடுப்பு அமைக்கப்பட உள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
தடுப்பு அமைக்கப்பட்ட பிறகு வியாபாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து பொருட்களை இறக்கும் கனராக வாகனங்களை அனுமதிக்க நேரம் நிர்ணயிக்கப்படும்.