/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் ரத்ததான முகாம்
/
என்.பி.ஆர்., கல்லுாரியில் ரத்ததான முகாம்
ADDED : செப் 15, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் பாபி நாத் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சிவகுமார்,கார்த்திகா முன்னிலை வகித்தனர். 2 ம் ஆண்டு வணிகம் , கணினி அறிவியல் துறை மாணவன் முத்தையா வரவேற்றார். 50 மாணவர்கள் ரத்தம் வழங்கினர்.
உலுப்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா,டாக்டர் உமா கணேஷ் பாண்டி,திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர் தங்க பிரகாஷ் குழுவினர் ரத்தம் சேகரித்தனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர் வீரமாரிமுத்து நன்றி கூறினார்.