
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சமாஜ தலைவர் ஹரிஹர முத்து அய்யர் துவங்கி வைத்தார்.
50க்கு மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர்.
பழநி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயகுமார், அரசு மருத்துவர் அமுதவாணன், முருகேசன், பா.ஜ. மாவட்ட தலைவர் கனகராஜ் பொருளாளர் ஆனந்த், ஹிந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் பாலன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் செந்தில், மாவட்ட பொறுப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டனர்.