/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
/
'கொடை' யில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
ADDED : ஏப் 28, 2024 06:13 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் தனியார் பங்களாக்களில் உள்ள தோட்டப் பூங்காவில் அழகுற பூத்துள்ள மலர்கள் வசிகரிக்கின்றன.
ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம்.
ஒரு வாரம் நடக்கும் கண்காட்சியை லட்ச கணக்கான பயணிகள் பார்வையிடுவர்.
கோடை விழாவின் போது தோட்டக்கலைத்துறை தனியார் பராமரிக்கும் தோட்டப் பூங்காக்களை பார்வையிட்டு பரிசுகள் வழங்கி கவுரவிக்கும்.
நடப்பாண்டில் பங்கு பெறுவதற்காக ஏராளமானவர்கள் மலர் செடிகளை பராமரித்து வருகின்றனர். இதில் ரோஜா, டெல்பினியம், கேலண்டுல்லா, பேன்ஸி , பாப்பி, ஸ்வீட் நைஸ், மேரிகோல்டு, ஆஸ்டர் உள்ளிட்ட ஏராளமான மலர்கள் தனியார் தோட்டப் பூங்காக்களில் அழகுற பூத்து ரோட்டோரங்களில் செல்வோரை வசிகரிக்கிறது.

