/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாகன முகப்பு விளக்குகளில் இல்லை கருப்பு ஸ்டிக்கர்கள்; கண்களை கூச செய்யும் வெளிச்சத்தால் அதிகரிக்கும் விபத்து

UPDATED : மே 05, 2024 07:35 AM
ADDED : மே 05, 2024 04:44 AM

மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவோர் எதிரே வரும் வாகனங்களில் கண் கூசும் விளக்குகளின் ஒளியால் திணறுகின்றனர். சிலர் வாகனங்களை அப்படியே நிறுத்தி விடுகின்றனர். தற்போது டூவீலர் முதல் அனைத்து வாகனங்களிலும் நவீனரக பவர்புல் பல்புகளை உரிமையாளர்கள் பொருத்திக் கொள்கின்றனர்.
இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனம் டூவீலரா, நான்கு சக்கர வாகனமா என தெரியாத அளவிற்கு முகப்பு விளக்குகள் அதிக பிரகாசமாக உள்ளது. இதன் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக முகப்பு விளக்குகளில் நடுவில் கருப்பு ஸ்டிக்கர், கருப்பு பெயின்ட் அரை வட்டமாக அடிப்பது வழக்கம்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையானது வாகனங்களின் முகப்பு விளக்கின் நடுவில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டது. அந்த நேரங்களில் மட்டும் கருப்பு நிற ஸ்டிக்கர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு அபராதமும் விதித்தனர்.
ஆனால் தற்போது பெரும்பாலான வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு என்பது அறவே இல்லை.வாகன ஓட்டிகளும் அதன் அவசியத்தை உணராததால் இரவுநேரங்களில் விபத்துக்கள் அதிகரிக்கிறது.
பலர் இரவில் லைட்களை டிம், பிரைட் செய்வதும் கிடையாது. இது தொடர்பாக தினமும் துறையினர் நடவடிக்கை அவசியமாகிறது.