ADDED : ஜூன் 05, 2024 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி முருகன் கோயிலில் நவபாஷாண மூலவர் சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் ஜீவசமாதி சன்னதி உள்ளது. இங்கு போகர் சித்தர் வழிபட்ட மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் சிலைகள் உள்ளன.
தினமும் இங்கு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. இங்கு நேற்று போகர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி உச்சிகால பூஜை நேரத்தில் போகர் சித்தர் வழிபட்ட புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கத்திற்கு 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதன் பின் அலங்காரம், தீபாராதனை நடந்தன. புலிப்பாணி ஆசிரமத்தில் அன்னதானமும் நடந்தது. புலிப்பாணி பாத்திர சுவாமிகள், வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.