/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
/
தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED : ஆக 20, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி : பழநி ஆயக்குடி வீரலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பழநி புது ஆயக்குடி வீரலட்சுமி அம்மன் கோயில் திருவிழா ஆக.5 முதல் நடைபெற்று வருகிறது. ஆரிய குல பங்காளிகள் குல தெய்வமான வீரலட்சுமி அம்மன் கோயில் 15வது நாள் திருவிழாவில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சக்தி கரகம் எடுத்து வரப்பட்டது. கோயில் கம்பத்தில் தீபம் ஏற்ற பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.