/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாடகை பாக்கியால் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு
/
வாடகை பாக்கியால் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு
ADDED : ஆக 02, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : தாண்டிக்குடி பெரும்பாறையில் வாடகை பாக்கியால் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
பெரும்பாறை புதுாரில் தனியார் இடத்தில் பி.எஸ் என்.எல் ., டவர் அமைத்து சேவை அளித்து வருகிறது. தனியார் இடத்திற்கு வாடகை செலுத்தாததால் உரிமையாளர் டவர் வளாகத்திற்கு பூட்டு போட்டு சென்றார்.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட சரி செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பினர். நான்கு நாளாக பெரும்பாறை உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட கிராமங்களில் அலைபேசி சேவை பாதித்துள்ளது.