நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அருகே சின்னாரகவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி 67. அரசு பஸ் மோதி கால் பாதிக்கப்பட்டது. இழப்பீடு கோரி பழநி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2022 ல் ரூ. மூன்று லட்சத்து 51 ஆயிரத்து 818 ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை போக்குவரத்து துறை வழங்க வில்லை. இதையடுத்து 2024 ல் நிறைவேற்று மனுவை ராமசாமி தாக்கல் செய்தார். விசாரித்த பழநி கூடுதல் சார்பு நீதிபதி பாரதி வட்டியுடன் சேர்த்து ரூ. 5 லட்சத்து 196 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
ஓராண்டாகியும் தொகையை வழங்க தாமதம் ஆனதால் நீதிபதி உத்தரவில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர் துரை ஆகியோர் அரசு பஸ்சை ஜப்தி செய்து நிதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.