ADDED : ஜூலை 05, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இல்லங்களில் சேர்த்து பராமரிக்க முன்வரும் தொண்டு நிறுவனங்கள், புதியதாக மன நல காப்பகம் துவங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசின் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தொண்டு நிறுவனங்கள் 40 மன நலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க இடவசதி வைத்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 12ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், திண்டுக்கல் என்ற முகவரிக்கு விண்ணபிக்கலாம்.