/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு அழைப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு அழைப்பு
ADDED : ஆக 09, 2024 12:51 AM
திண்டுக்கல்: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- செப்டம்பர், அக்டோபரில் மாவட்டம், மண்டலம், மாநில அளவில் நடக்க உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் ,மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடக்க உள்ளன.
வயது வரம்பு பள்ளி மாணவர்களுக்கு 12 முதல் 19 , கல்லுாரி மாணவர்களுக்கு 17 முதல் 25, மாற்றுத்திறனாளிகள் அனைத்து வயது பிரிவினர், 15 முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினர், அந்தந்த மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் CM Trophy 2024 - Online Registration- Player Login - ல் ஆக. 25 க்குள் முன்பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியிலோ, 74017 03504 ல் அணுகலாம்.