sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் டூவீலர் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

/

திண்டுக்கல்லில் டூவீலர் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

திண்டுக்கல்லில் டூவீலர் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

திண்டுக்கல்லில் டூவீலர் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


ADDED : ஆக 04, 2024 06:56 AM

Google News

ADDED : ஆக 04, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி பிரிவில் கார் மோதிய விபத்தில் டூவீலரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாயினர்.

திண்டுக்கல் அருகே இரண்டலப்பாறை பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 25 .இவரது மனைவி - அருணா 22. இவர்களுக்கு ரக்சன் ஜோ 7, ரக் ஷிதா 4, என இரு குழந்தைகள் இருந்தனர்.

ஜார்ஜ்பெர்னாண்டஸ் நேற்று மதியம் 12:30 மணியளவில் மனைவி, குழந்தைகள் மற்றும் மாமியார் சரோஜா என 5 பேருடன் ஒரே டூவீலரில் இரண்டலப்பாறையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பின்னால் மற்றொரு டூவீலரில் நொச்சொடைப்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி வந்து கொண்டிருந்தார்.

குள்ளனம்பட்டியை அடுத்த நல்லாம்பட்டி அருகே வந்தபோது துவரங்குறிச்சியை சேர்ந்த பிரவீன் 22 , ஓட்டி வந்த கார் டூவீலர்கள் மீது மோதியது. இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் , மனைவி, இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

காயமடைந்த சரோஜா மேல்சிகிச்சைக்கு மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

காயத்துடன் குழந்தைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us