ADDED : ஏப் 05, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : கர்நாடக மாநிலம் கல்புரிகியை சேர்ந்தவர் விஷால் 22.
இவரது உறவினர்கள் ஆறு பேருடன் காரில் கன்னியாகுமரி நோக்கி வந்தார். விஷால் காரை ஓட்டினார். வேடசந்தூர் ஐயர் மடம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற அரவக்குறிச்சியை சேர்ந்த மெக்கானிக் கமலக்கண்ணன் 34, டூ வீலரில் மீது மோதியது. டூவீலரும், காரும் பள்ளத்தில் இறங்கின. கமலக்கண்ணன், கார் டிரைவர் விஷால், சுதர்சன் 22, தத்து 21, ஆகியோர் காயமடைந்தனர்.

