ADDED : மார் 03, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி கொடைக்கானல் ரோடு ஆலமரத்துகளம் பகுதியில் கடை வைத்திருப்பவர் சங்கர் 40. நேற்று வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்தார்.
அப்போது திடீரென கொடைக்கானல் ரோட்டில் பழநி நோக்கி வந்திருந்த கார் வேகமாக கடைக்குள் புகுந்தது. அப்போது சங்கர் இல்லாததால் அவருக்கு காயம் ஏற்படவில்லை.
காரில் வந்த நபர்கள் தப்பினர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.