/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு
/
ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஆக 26, 2024 07:03 AM
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மாடுகள் அணிவகுத்து சென்ற விவகாரத்தில் மாடுகளின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் 5 பிளாட்பாரங்கள் உள்ளது. இவ்வழித்தடத்தில் தினமும் 100க்கு மேலான ரயில்கள் வந்து செல்கின்றன. ஆக.23 மாலை 6:00 மணிக்கு 4 வது பிளாட்பாரத்தில் 10க்கு மேலான மாடுகள் அணிவகுத்து சென்றன. இதை பார்த்த ரயில் பயணிகள் அச்சத்துடன் அங்கும் இங்குமாய் சிதறினர். திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படையினர் மாடுகளை பின் தொடர்ந்து ஒத்தக்கண்பாலம் பகுதியில் உள்ள மாடுகளின் உரிமையாளரை கண்டு பிடித்தனர். அவர்மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் கால்நடைகள் புகாமல் தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.