/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் பொதுக்கூட்டத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வழக்கு
/
திண்டுக்கல்லில் பொதுக்கூட்டத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வழக்கு
திண்டுக்கல்லில் பொதுக்கூட்டத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வழக்கு
திண்டுக்கல்லில் பொதுக்கூட்டத்திற்கு மாற்று இடம் ஒதுக்க வழக்கு
ADDED : ஆக 23, 2024 04:55 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் திருப்பதிராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
ஒலிபெருக்கியை பயன்படுத்தி இரவு 10:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்தப்படுகிறது.
அருகில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், விடுதி, மருத்துவமனைகள் உள்ளன. கூட்டத்தின்போது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க மாற்று இடத்தை தேர்வு செய்து பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க கலெக்டருக்கு மனு அனுப்பினோம்.
பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், எஸ்.பி.,மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.,11 க்கு ஒத்திவைத்தது.