/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை ஹிந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 04, 2024 02:36 AM
பழநி:''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்,'' என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறினார்.
பழநியில் ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க புதிய தலைமை அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பழநி கிரி வீதி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கிரிவலப் பாதையில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை எம்.பி., வெங்கடேசன் லோக்சபாவில் செங்கோலை வைத்திருந்தவர்கள் பெண்களை அடிமைகளாக வைத்திருந்தார் எனக் கூறியிருப்பது இழிவுப்படுத்துவதாக உள்ளது.
நடிகர் விஜய் திராவிட கலாசாரத்தோடு அரசியலைக் கொண்டு செல்கிறார். கோவையில் சனாதனத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாதிரியார் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால் பிற மதத்தை ஹிந்து அமைப்பினர் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை என்பதை ஹிந்து முன்னணி வலியுறுத்துகிறது என்றார்.