/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிலாத்தில் பழங்குடியினர் கணக்கெடுப்பு
/
பிலாத்தில் பழங்குடியினர் கணக்கெடுப்பு
ADDED : ஆக 16, 2024 05:03 AM
வடமதுரை: பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை மேம்பாடு அடைய செய்ய அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்தவும், புதிய திட்டங்களை உருவாக்குவதற்கும் புள்ளி விபரங்கள் அவசியம்.
இவற்றை சேகரிக்க இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து வடமதுரை ஒன்றியம் பிலாத்து ஊராட்சிக்கு உட்பட்ட கம்பிளியம்பட்டியில் பழங்குடியினரின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு முகாம் நடந்தது. இல்லம் தேடி கல்வி உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் குருபிரசாத், பிலாத்து ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் ராமசாமி,வேடசந்துார் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாஜலபதி, வடமதுரை ஒன்றிய பொறுப்பாசிரியர் குமரேசன் பங்கேற்றனர்.

