ADDED : ஜூலை 22, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
பட்டிவீரன்பட்டி, ஜூலை 23-
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதற்கட்டமாக வீட்டுப் பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பிற்கான பணிகள் ஆக.,1 முதல் 30 வரை நடக்கிறது. இப்பணியில் ஈடுபடவுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் எம்.வாடிப்பட்டியில் மூன்று நாட்கள் நடந்தது.
ஹெச்.சி.ஓ., செயலி மூலம் பெயர், முகவரி பதிவு செய்த பின் அதில் கேட்கப்படும் 34 கேள்விகளுக்கு பொதுமக்களின் பதிலை கேட்டு பதிவு செய்யும் முறை, செயல்பாடுகள் குறித்து பயிற்சியாளர்கள் ஹெலன், தேவசித்தம் ஆகியோர் விளக்கினர்.
முகாமில் சேவுகம்பட்டி, அய்யம்பாளையம் பேரூராட்சி பகுதி அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். முகாமை பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரமேஷ்பாபு, கோபிநாத் துவக்கி வைத்தனர்.
