/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி
/
மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி
ADDED : மார் 25, 2024 07:02 AM
நிலக்கோட்டை, '' மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்'' என அமைச்சர் பெரியசாமி பேசினார்.
நிலக்கோட்டையில் நடந்த சட்டசபை தொகுதி இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:
ஜூன் 4-ல் ஓட்டு எண்ணும் போது தமிழ்நாட்டில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் எம்.பி., யாக சச்சிதானந்தம் வர வேண்டும். மத்தியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., இந்த தேர்தலுக்கு பிறகு இருக்குமா என்று தெரியவில்லை.
அந்த கட்சியின் கதை இந்த தேர்தலுடன் முடிந்து விடும். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் இல்லை.
மாநில உரிமைக்காக போராடும் இயக்கம் தி.மு.க., என்றார். பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டியன்,முருகன், கரிகாலபாண்டியன், கனிக்குமார், நகர செயலாளர்கள் சின்னதுரை தங்கராஜன் அருண்குமார் ஜோசப், விஜயகுமார் கலந்து கொண்டனர்.

