/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முடங்கிய போக்குவரத்து சிக்னலால் விபத்துக்கு வாய்ப்பு
/
முடங்கிய போக்குவரத்து சிக்னலால் விபத்துக்கு வாய்ப்பு
முடங்கிய போக்குவரத்து சிக்னலால் விபத்துக்கு வாய்ப்பு
முடங்கிய போக்குவரத்து சிக்னலால் விபத்துக்கு வாய்ப்பு
ADDED : ஆக 02, 2024 06:36 AM

ரோட்டில் குப்பை குவியல்
திண்டுக்கல் மாலப்பட்டி ரோட்டில் குப்பை குவிந்துள்ளது .பிளாஸ்டிக் கலந்த குப்பை என்பதால் மண்வளம் பாதிப்பு ஏற்படுகிறது . குப்பை பல நாட்களாக அப்படியே உள்ளதால் துர்நாற்றமும் வீசுகிறது .இதனை அகற்ற வேண்டும் செந்தில்குமார், மாலப்பட்டி.
........-----
கழிப்பறை இன்றி அவதி
திண்டுக்கல் அருகே ம.மூ. கோவிலுாரில் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த கழிப்பறையும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் ,புதியதாக பொது கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி, திண்டுக்கல்.
...........-----போக்குவரத்தில் சிரமம்
அகரம் பேரூராட்சி காமாட்சிபுரத்தில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் வீதிகளில் செல்கிறது .இதனால் ரோடும் சேதமடைந்து போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுத்துகிறது . இதை கருதி சாக்கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமசாமி, காமட்சிபுரம்.
............-----
ஆபத்தான மின் கம்பம்
பாகாநத்தம் ஒத்தப்பட்டியில் இருந்து ஆண்டிக்குளம் செல்லும் ரோட்டில் மின்கம்பம் சேதமுற்று ஆபத்தாக உள்ளது. விபரீதம் நடக்கும் முன்பு இதனை மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமசாமி, எரியோடு.
.........-----செயல்படாத சிக்னல்
ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் ரோடு தொடங்கும் இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. வாகனங்கள் கட்டுப்பாடின்றி விருப்பம் போல் செல்வதால் விபத்துக்கு வாய்ப்பு உள்ளது.இதனை சீர் செய்ய வேண்டும் .- வேலுச்சாமி ஒட்டன்சத்திரம்.
...............
காட்சி பொருளாக குடிநீர் அமைப்பு
கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக்கில் அமைக்கப்பட்ட கட்டண குடிநீர் அமைப்பு செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குடிநீரின்றி அவதியடைகின்றனர். இதைசரி செய்ய வேண்டும். எஸ். சக்திவேல், கொடைக்கானல்.
...................-----
பராமரிப்பில்லா தொட்டி
நத்தம் அருகே பரளிபுதுார் ஊராட்சி தேத்தம்பட்டியில் திறந்த நிலையில் உள்ள ஊராட்சி தண்ணீர் தொட்டியால் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. தொட்டியை முறையாக பராமரித்து சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். சோமு,நத்தம்.
.....