/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின் கம்பத்தில் படரும் செடிகளால் விபத்துக்கு வாய்ப்பு
/
மின் கம்பத்தில் படரும் செடிகளால் விபத்துக்கு வாய்ப்பு
மின் கம்பத்தில் படரும் செடிகளால் விபத்துக்கு வாய்ப்பு
மின் கம்பத்தில் படரும் செடிகளால் விபத்துக்கு வாய்ப்பு
ADDED : செப் 04, 2024 06:58 AM

பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள்
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது . பயணிகள் சென்றவரவும் சிரமம் ஏற்படுகிறது .டூவீலர்களை நிறுத்துவதை தடுக்க நகராட்சி நிர்வாகம்,போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபி, ஒட்டன்சத்திரம்.
.......------மின்கம்பத்தில் செடிகள்
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் குட் செட் அருகே மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளது.இதன் அருகே செல்வோர் பயத்துடன் செல்கின்றனர் .செடிகளை அகற்ற வேண்டும்.மணிவேல், திண்டுக்கல்.
................------
தெருநாய்களால் அச்சம்
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் பாதசாரிகள்,வாகன ஓட்டிகளை கடிக்க பாய்வதால் ஒரு வித அச்சத்துடன் செல்கின்றனர் . நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிற்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்குமார்,ரவுண்ட் ரோடு.
..................--------சாக்கடையில் அடைப்பு
திண்டுக்கல் அருகே குடைப்பாறை அந்தோணியார் தெருவில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது . சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. கொசுக்களின் கூடாரமாகவும் உள்ளது . செல்வகுமார், திண்டுக்கல்.
............---------
குப்பையை அகற்றுங்க
திண்டுக்கல் ஆர். எம். காலனியில் இருந்து அறிவு திருக்கோயில் செல்லும் ரோடு அருகே குப்பை பல நாட்களாக அள்ளாமல் சிதறி கிடைக்கிறது. பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது .குப்பை அகற்ற வேண்டும் .மஞ்சுளா, திண்டுக்கல்.
...............---------சேதமடைந்த நிழற்குடை
கே.சி.பட்டி கடையமலை நிழற்குடை சேதமடைந்தும் சீரமைக்காமல் ஆபத்தான நிலையில் உள்ளது. அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களும் இங்கு காத்திருக்கின்றனர். நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னகாமு, கே.சி.பட்டி.
.................----------ரோட்டில் ஓடும் சாக்கடை
ஒட்டன்சத்திரம் நகராட்சி செக்போஸ்ட் பகுதியில் நாகணம்பட்டி ரோடு தொடங்கும் இடத்தில் ரோட்டில் சாக்கடை நீர் வழிந்தோடி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. இப்பகுதியில் சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலுச்சாமி ,ஒட்டன்சத்திரம்.
............--------