/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்தநிலை தண்ணீர் தொட்டியால் தொற்றுக்கு வாய்ப்பு
/
திறந்தநிலை தண்ணீர் தொட்டியால் தொற்றுக்கு வாய்ப்பு
ADDED : ஆக 07, 2024 05:50 AM

சரி செய்யலாமே
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி சத்யாநகரில் மேல்நிலைத் தொட்டி சேமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மழை நேரங்களில் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் இதை சரி செய்ய வேண்டும். தனஞ்செயன், செட்டிநாயக்கன்பட்டி.
..................----
நாய்களால் அச்சம்
திண்டுக்கல் கூட்டுறவு நகரில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் . பாசாரிகள் அப்பகுதியில் செல்லவே அச்சப்படுகின்றனர் .இதனை கட்டுப்படுத்த வேண்டும்.முருகானந்தம், திண்டுக்கல்.
..............-----
பாலத்தை சரி செய்யுங்க
ஒட்டன்சத்திரம் தாலுகா அத்திக்கோம்பையில் சாக்கடை தரை பாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர் . பெரும் விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும். லோகநாதன் கே.அத்திக்கோம்பை.
............-----
அவசியமாகிறது வடிகால்
பள்ளப்பட்டி ஊராட்சி சின்னப்பள்ளப்பட்டி ஏ.டி .காலனி தெருவில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . வடிகால், சாக்கடை அமைக்க வேண்டும். சுரேஷ், சின்னபள்ளப்பட்டி.
...............------திறந்த நிலையில் தொட்டி
நத்தம் அருகே பரளிபுதுார் ஊராட்சி தேத்தம்பட்டியில் திறந்த நிலையில் உள்ள ஊராட்சி தண்ணீர் தொட்டியால் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. தொட்டியை முறையாக பராமரித்து சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும். சோமு,நத்தம்.
...............------
மின் கம்பம் சேதம்
திண்டுக்கல் அருகே மடூர் ஊராட்சி எம்.மேட்டுப்பட்டி தெற்கு தெருவில் மின்கம்பம் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழை, காற்று காலம் என்பதால் அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் ராஜா, மடூர்.
.................-------அடிகுழாயில் பழுது
திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் மாநகராட்சி அடிகுழாயில் பழுது ஏற்பட்டுள்ளது . பத்து மாதங்களாக இதே நிலையில் உள்ள அடிகுழாயை பழுது நீக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.புஷ்பகிரிதரன், திண்டுக்கல்.
...........
...........