/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்
/
அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்
அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்
அபிராமி அம்மன் கோயிலில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்
ADDED : ஏப் 23, 2024 06:35 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன்,பத்மகிரீஸ்வரர் கோயிலில் நடந்த சித்திரை திருவிழா திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.12ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நந்திகேஸ்வரர், சிம்மம், அன்னம், யானை, குதிரை வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சிகள் 11 நாட்களாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. பிரியாவிடையுடன் பத்மகிரீஸ்வரர் வலம் வந்த திருத்தேரைத் தொடர்ந்து அபிராமி அம்மன் திருத்தேர் வீதி உலாவும் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.