ADDED : மே 30, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை அதிகரித்து இருந்த நிலையில் சேனைக்கிழங்கு விலை குறைந்து காணப்பட்டது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கரூர் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் சேனைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
சில நாட்களாக வரத்து அதிகரித்திருந்ததால் சேனை விலை குறைந்து கிலோ ரூ.65க்கு விற்பனை ஆனது. மழை,முகூர்த்த விழாக்களை முன்னிட்டு தக்காளி, முருங்கை, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
பீன்ஸ் கிலோவிற்கு ரூ. 8 குறைந்து ரூ.57 க்கு விற்றது.
வரத்து வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை இன்னும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.