/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முதல்வர் மனைவி 'கொடை'யில் படகு சவாரி
/
முதல்வர் மனைவி 'கொடை'யில் படகு சவாரி
ADDED : மே 01, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று முழுமையாக விடுதியிலே ஓய்வெடுத்தார்.
மாலையில் ஏரி சாலையில் உள்ள கங்கா காம்பவுண்ட் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவி துர்கா, உறவினர்கள், பேரன்கள் நகராட்சி படகு குழாமில் இரண்டு சிக்காரா படகுகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சவாரி செய்தனர். இதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது தவிர்க்கப்பட்டது. இதனிடையே அவசரகதியில் படகு குழாமின் ப்ளோட்டிங் ஷெட்டி நடைபாதையில் இடைவெளியில் டேப் ஒட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

