ADDED : செப் 01, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் திண்டுக்கல், பழநி உட்பட 5 இடங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளில் தட்டச்சு தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 110 தட்டச்சு பயிற்சி பள்ளிகளில் பயிலும் 5223 பேர் பங்கேற்றனர்.இவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழியில் ஜூனியர், சீனியர் தட்டச்சு தேர்வு நடைபெற்றது.
வேகமாக தட்டச்சு செய்தல், கடிதம், அறிக்கை தயாரித்தல் என 2 தட்டச்சு தாள்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு அந்தந்த கல்லூரி முதல்வர்களின் மேற்பார்வையில் நடந்தது.