/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு
/
பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு
பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு
பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு
ADDED : மார் 11, 2025 05:37 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரையடுத்த மோர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்புகள் நடப்பதால் புதிய கட்டடம் கோரி மாணவர்கள் பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.
மோர்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கட்டடம் சேதமாக 7 மாதங்களுக்கு முன்பு இடித்தனர். தனியாருக்கு சொந்தமான வீட்டில் தற்போது பள்ளி செயல்படுகிறது.
இடநெருக்கடியால் அருகிலுள்ள அரசமரத்தடியில் வகுப்புகள் நடக்கிறது. மாணவர்களுக்கான மதிய உணவு நாடக மேடையில் சமைக்க இதையும் தெருவில் அமர்ந்து சாப்பிட வேண்டிய அவல நிலை உள்ளது.
மோர்பட்டி பகுதியை சேர்ந்த 1500 வாக்காளர்களுக்கான ஓட்டுச் சாவடியாகவும் இந்த பள்ளி செயல்பட்டு வந்தது. அடுத்தாண்டு தேர்தல் வந்தால் ஓட்டளிக்க வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக மோர்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பெற்றோர்களுடன் வந்த மாணவர்கள் கலெக்டர் சரவணனை சந்தித்து மனு வாயிலாக முறையிட்டனர்.