/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு மருத்துவமனையில் கலெக்டர் மக்களோடு மக்களாக ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் கலெக்டர் மக்களோடு மக்களாக ஆய்வு
அரசு மருத்துவமனையில் கலெக்டர் மக்களோடு மக்களாக ஆய்வு
அரசு மருத்துவமனையில் கலெக்டர் மக்களோடு மக்களாக ஆய்வு
ADDED : மார் 14, 2025 01:46 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் நேற்று காலை 7:30 மணிக்கு மக்களோடு மக்களாக வந்து கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் கலெக்டராக பொறுப்பேற்ற சரவணன் செயல்படாமல் இருக்கும் சிக்னல்கள், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகள், சேதமான ரோடுகள், சேதமான பூங்காக்களை சீரமைக்க உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறார்.
நேற்று காலை 7:30 மணிக்கு மக்களோடு மக்களாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை வந்தார். குழந்தைகள் வார்டில் டாக்டரிடம் எப்போது பணிக்கு வருவீர்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரி செய்வதற்கான வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார். ஒரு மணி நேரம் வார்டு முழுவதையும் சுற்றிப்பார்த்து மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.