நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 48 வார்டுகளிலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவர்கள் 24 குழுக்களாக பிரிந்து தடுப்பு நடவடிக்கைகைள் ஈடுபட்டனர். இப்பணி முறையாக நடக்கிறதா என மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் ஆர்.வி.நகர் பகுதியில் ஆய்வு செய்து துண்டு பிரசுரம் வழங்கினார். சுகாதார அலுவலர் விஜய்ஆனந்த், ஆய்வாளர் ரஞ்சித்குமார் பங்கேற்றனர்.